சஹாபாக்கள்
பற்றிய அறிய தகவல்கள் 1
1.
கே: சஹாபாக்களில் . யாருடைய
மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது ?
ப: ஸஃது இப்னு மஆத் (ரலி)
2.
கே: நாயகத்தின் ‘ஹவாரிய்யூன்கள்’ (மார்க்க
உதவியாளர்கள்) என்னும் தோழர்களில் ஒருவர் எனக் கூறப்பட்டவர் யார்?
ப: அஸ்ஸுபைர் இப்னுல் அவாம் (ரலி)
3.
கே: பெருமானார்
(ஸல்) காலத்தில் இருபது வயதிற்கும் குறைவான இளைஞர் ஒருவர் படைத்தளபதியாக
நியமிக்கப்பட்டார் அவர் யார்?
ப:
உஸாமா பின் ஜைது (ரலி)
4.
கே: உஹது யுத்தத்தில் இரு கைகளும் சல்லடையாக துளைக்கப்படும்
அளவு காயம் அடைந்த சஹாபி யார்?
ப: தல்ஹா பின் உபைதுல்லா (ரலி)
5.
கே: இஸ்லாத்தில்
(போர்க்களத்தில்) முதல்முதலில் அம்பு எய்து சண்டையிட்ட சஹாபி யார்?
ப: ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி)
6.
கே: சஹாபாக்களில்
யாரைப்பற்றி (ஸாலிஹான) நல்ல மனிதர் என நபி (ஸல்) புகழ்ந்து கூறியுள்ளார்கள்?
ப: அப்துல்லா பின் உமர் (ரலி)
7.
கே: சஹாபாக்களில் ஹலால்
(ஆகுமானவை) ஹராம் (ஆகாதவை) பற்றி அதிகம் அறிந்திருந்தவர் யார்?
ப: முஆத் பின்
ஜபல் (ரலி)
8.
கே: சஹாபாக்களில் அழகிய முறையில் குர்ஆன் ஓதக்கூடியவர்
யார்?
ப: உபை இப்னு கஃபு (ரலி)
9.
கே: இந்த சமுதாயத்தின் நம்பிக்கையாளர் (அமீனுல்
உம்மத்) என புகழப்பட்ட சஹாபி யார்?
ப: அபூ உபைதா (ஆமிர்
பின் ஜர்ராஹ் (ரலி)
10. கே: கிஸ்ராவின் முத்து பதித்த காப்புகள் கிடைக்கும்
என எந்த சஹாபிக்கு நபி (ஸல்) சுபச்செய்தி கூறினார்கள்?
ப: ஸுராக்கா பின் மாலிக் (ரலி)
11.
கே: சுவனத்தில் எந்த சஹாபியின் கிராஅத் (குர்ஆன்)
ஓதுதலை நபி (ஸல்) கேட்டார்கள்?
ப: ஹாரிஸா பின் நுஃமான் (ரலி)
12.
கே: ஹிஜ்ரத்துக்கு பின்னால் பிறந்த முதல் குழந்தையான சஹாபி
யார்?
ப: அப்துல்லா பின் ஜுபைர் (ரலி)
13.
கே: கஃபாவின் உள்ளே
(கட்டிடத்தின் உள்பகுதியில்) பிறந்த குழந்தையான சஹாபி யார்?
ப: ஹகீம் பின்
ஹிஜாம் (ரலி)
14.
கே: இஸ்லாத்தில் மூன்று
முறை நடைபெற்ற அனைத்து ஹிஜ்ரத்திலும் பங்கு பெற்ற சஹாபி யார்?
ப: அபூமூஸா
அஷ்அரி (ரலி)
15.
கே: இஸ்லாத்தில்
முதல்முதலாக பிறந்த குழந்தையான சஹாபி யார்?
ப: அப்துல்லா பின் உமர் (ரலி)
16.
கே: இஸ்லாத்தில்
போர்களத்தில் முதல்முதலில் ஷஹீதான (வீரமரணம் அடைந்த) சஹாபி யார்?
ப: உபைதுல்லா
பின் ஹாரிஸ் (ரலி)
17.
கே: இந்த சமுதாயத்தில்
(ஹிப்ருல் உம்மத்) நுண்ணறிவு மிக்கவர் என புகழப்பட்ட சஹாபி யார்?
ப: அ) அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி)
18.
கே: இஸ்லாத்தில்
முதல்முதலில் குர்ஆனை சப்தமிட்டு பகிரங்கமாக ஓதிய சஹாபி யார்?
ப: அப்துல்லா பின் மஸ்வூத் (ரலி)
19.
கே: இஸ்லாத்தில் முதல்முதலில்
ஜன்னத்துல் பகீஃஉ கபரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்ட சஹாபி யார்?
ப: அஸ்அத் பின் ஜராரா (ரலி)
20.
கே: நபி (ஸல்) அவர்கள்
யூதர்களின் சுர்யானி மொழியை கற்றுக்கொள்ளும்படி எந்த சஹாபி இடம் கூறினார்கள்?
ப: ஜைது பின் ஸாபித் (ரலி)
இஸ்லாமிய கேள்விகளை எதில் கேட்பது?
ReplyDeleteநீங்கள் உங்கள் பிளாக்கில் தயார் செய்து கீழே post by என்பதில் G+ வின் வெயிட்டு கேட்கலாம்
Deleteஇஸ்லாமிய கேள்விகளை எதில் கேட்பது?
ReplyDelete