Tuesday, April 26, 2011

கோடை சிந்தனை...


காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!
கோடைகாலம் ஆரம்பமாகிவிட்டது கோடையின் கொளுத்தும் வெயிலை விட்டும் குறிப்பாக கத்தரி வெயிலை விட்டும் நம்மைக் காத்துக்கொல்வதற்காக மருத்துவர்கள் மற்றும் சமுதாய ஆர்வளர்கள்,அனுபவ சாலிகள் பலவிதமான ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் அவ்வப்போது பத்திரிக்கைகள்,வானொலி,தொ[ல்]லைக்காட்சி போன்றவற்றில் கூறிக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை கோடை வெயிலின் கோரப்பிடியிலிருந்தும், விடுமுறைக் காலங்களில் வீணாக சுற்றிதிரிவதிலிருந்தும் காப்பாற்றும் நிலையில் விடுமுறையும் பிள்ளைகளுக்கு பிரயோஜனமாக கழிவதற்காக கம்யூட்டர்,டைப்ரைட்டிங்,தையல் போன்ற உபரியான கல்விகளைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கின்றனர். இது பிள்ளைகளின் நேரங்களையும்,அவர்களின் ஒழுங்கு முறை நடவடிக்கைகளையும் பாதுகாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இதே நேரத்தில் இஸ்லாமிய பெற்றோர்கள் இவ்வுலக வெயிலின் வெப்பத்திலிருந்து தம் பிள்ளைகளை பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்திவிடாமல் தாம் கொண்டுள்ள ஈமானின் அடிப்படையில் மறுஉலக வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் குறிப்பாக மிகப்பெரும் நரக நெருப்பின் படுபயங்கரமான வெப்பத்தை விட்டும் அதன் தண்டனையை விட்டும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதை மறந்து விடக்கூடாது.
அதனை நினைவூட்டும் விதமாக அல்லாஹுதஆலா தன் திருமறையில்
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ (6)
 "ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் உங்களையும் உங்கள் [குடும்பத்தினர்] மனைவி,மக்கள்,மற்றும் உங்களுக்கு கீழ் உள்ளவர்களையும் நரகநெருப்பை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதர்களும், கற்களுமாகும். {அதில் வேதனை செய்வதற்காக}இரக்கமற்ற இருகிய மனம் கொண்ட வலிமைமிக்க வானவர்கள் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளார்கள். இறைவன் அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளதற்கு மாறு செய்யமாட்டார்கள்,அவர்களுக்கு இடப்பட்ட உத்தரவை உடனடியாக செய்துமுடிப்பர்கள்.{அவர்கள் யாருடைய ஆசை வார்த்தைக்கும்,அரட்டுதலுக்கும் அசைய மாட்டார்கள்,காசு பணத்திற்கும்,கையூடிற்கும் மசிய மாட்டார்கள்.
[அல்குர்ஆன்:]
சிந்தனை;
இவ்வுலக நெருப்பின் பிரதிபலிப்பை போன்ற வெயிலின் உக்கிர வெப்பத்தையே நம்மால் தங்கிக்கொள்ள முடியவில்லை இவ்வுலக நெருப்பைவிட பன்மடங்கு அதிகமுள்ள நரக நெருப்பை நம்மால் எவ்வாறு தங்கமுடியும் எனவே அதிலிருந்து தப்பிக்கும் படி கூறிய அல்லாஹ் அதன் பயங்கரத்தையும் சிறுது எடுத்துக் கூறி எச்சரிக்கிறான் மேற்கூறிய வசனத்தின் தொடரில் "அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களும் ஆகும்" எனக்கூறி நரகில் மனித உடல்களால் எரிக்கப்படும் நரக நெருப்பு ஒரு பக்கம் துர்வாடையும்,உடல்கள் வேகுவதினால் வெளியேறும் சீல்சலங்களும் நிறைந்த அருவெறுப்பான நிலையையும், மற்றொரு பக்கம் கற்களால் எரிக்கப்படுவதால் கரைந்து சாம்பலாக வழியின்றி சதாவும் கனன்றுகொண்டே கொண்டே இருக்கும் வெப்பத்தாலும் ஆன வேதனை அங்கு ஏற்படும் என்பதைக்கூறி இப்படிப்பட்ட வேதனையை உங்களால் ஒரு போதும் தங்கிக்கொள்ள முடியாது எனவே அதை விட்டும் தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளதோ அவைகளை முழுமையாக கடைபிடிக்க முயற்சியுங்கள் என மிக்க கருணையுடன் கட்டளை பிரப்பிக்கின்றான்.
காக்கும் வழி?
இவ்வசனம் இறங்கியதும் சஹாபாக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது ஒவ்வொருவரும் அல்லாஹ்வை அஞ்சி அவனது கட்டளைகளை நிறைவேற்றியும்,அவனது விலக்கல்களை தவிர்ந்து கொள்வது கொண்டுமே நரகை விட்டும் தப்பிக்க முடியும் இதை நாம் செய்து விடலாம் ஆனால் நம் மனைவி மக்களை எப்படி நம்மால் காப்பாற்ற முடியும் என்பது புரியவில்லையே என்று நினைத்து அதற்கான விளக்கத்தை நபி[ஸல்]அவர்களிடமே கேட்டுத்தெரிந்து கொள்ள முற்பட்டார்கள்.
قوله : { يأَيُّهَا الذين ءامَنُواْ قُواْ أَنفُسَكُمْ } بفعل ما أمركم به ، وترك ما نهاكم عنه { وَأَهْلِيكُمْ } بأمرهم بطاعة الله ، ونهيهم عن معاصيه { نَاراً وَقُودُهَا الناس والحجارة } أي ناراً عظيمة تتوقد بالناس وبالحجارة كما يتوقد غيرها بالحطب ، وقد تقدّم بيان هذا في سورة البقرة . قال مقاتل بن سليمان : المعنى : قوا أنفسكم وأهليكم بالأدب الصالح النار في الآخرة . وقال قتادة ، ومجاهد : قوا أنفسكم بأفعالكم ، وقوا أهليكم بوصيتكم . قال ابن جرير : فعلينا أن نعلم أولادنا الدين والخير ، وما لا يستغنى عنه من الأدب ، ومن هذا قوله : { وَأْمُرْ أَهْلَكَ بالصلاة واصطبر عَلَيْهَا } [ طه : 132 ] وقوله : { وَأَنذِرْ عَشِيرَتَكَ الأقربين } [ الشعراء : 224 ](فتح القدير:7/257)
ஹழ்ரத் உமர்{ரலி}அவர்கள் நபி{ஸல்}அவர்களிடம் வந்து யாராசூலல்லாஹ்! நாங்கள் [பாவங்களை விட்டும் தவிர்ந்து இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதின் மூலம்]எங்களை நரகை விட்டும் பாதுகாத்துக்கொள்ளும் வழியை அறிந்துள்ளோம், ஆனால் எங்களின் மனைவி,மக்களை எவ்வாறு நரகை விட்டும் காப்பாற்றும் வழி தெரியவில்லையே என கேட்க அதற்கு நபி[ஸல்] அவர்கள்; அல்லாஹுதஆலா உங்களை எவைகளைச் செய்யும்படி கட்டளையிட்டுள்ளானோ அவைகளைச் செய்யும்படி உங்கள் குடும்பத்தினரையும் ஏவுங்கள். அவன் எவற்றைச் செய்ய வேண்டாம் என உங்களைத் தடுத்துள்ளானோ அவைகளை உங்கள் குடும்பத்தினரும் செய்ய வேண்டாம் என தடுத்து விடுங்கள்.இதுவே நீங்கள் அவர்களை நரகை விட்டும் காக்கும் வழியாகும் என கூறினார்கள்.           {நூல்;மஆரிஃபுல் குர்ஆன்}

குடும்பத்தினர் மீது அக்கறை:
இந்த வசனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் தன் மனைவி,மக்களுக்கு ஷரீஅத்தில் கடமையாக்கப்பட்ட விஷயங்கள்,[ஹலால்] ஆகுமாக்கப்பட்ட விஷயங்கள், [ஹராம்] தடுக்கப்பட்ட விஷயங்கள் போன்றவற்றின் அடிப்படை சட்டதிட்டங்களை காற்றுக்குக் கொடுப்பதும் அவற்றின்படி செயல்படச் செய்வதும் {ஃபர்ளு} கட்டாயக் கடமையாகும் என சட்டவல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.    {நூல்;மஆரிஃபுல் குர்ஆன்}
عن أَنَس بْن مَالِكٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ(ابن ماجة) عن أَيُّوب بْن مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رضي الله عنهم قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ.(احمد

يُحَدِّثُ  أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ – إبن ماجة 3661



ஒரு ஹதீஸில் வந்துள்ளது "எந்த மனிதர் தன் குடும்பத்தினர்களுக்கு உங்களின் தொழுகையை நிறைவேற்றுங்கள்! உங்களின் கடமையாக்கப்பட்ட நோன்பை கடைபிடியுங்கள்! உங்கள் செல்வத்தின் மீது கடமையான ஜகாத்தை சரியாக {கணக்கிட்டு} கொடுத்து விடுங்கள்! உங்களில் ஏழைகளுக்கு பொருளுதவி செய்யுங்கள்! இன்னும் உங்களில் அநாதைகளை ஆதரித்து வாருங்கள்! உங்கள் அண்டை வீட்டாரை அனுசரித்து வாழுங்கள்! என அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் பிரத்தியேகமாக அருள் புரிவானாக! அதன் மூலம் உங்கள் அனைவரையும் அல்லாஹ் சொர்க்கத்தில் ஒன்று சேர்க்க வழியாகும் எனக்கூறப்பட்டுள்ளது.   {நூல்;மஆரிஃபுல் குர்ஆன்}
எச்சரிக்கை:
قال رسول الله صلى الله عليه وسلم : « ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الأعظم الذي على الناس راع وهو مسئول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسئول عن رعيته والمرأة راعية في بيت زوجها وولده وهي مسئولة عن رعيتها وعبد الرجل راع على مال سيده وهو مسئول عنه ألا فكلكم راع وكلكم مسئول عن رعيته »
ஒரு ஹதீஸில் வந்துள்ளது உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பு தாரிகள் நாளை மறுமையில் உங்களின் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்! ஒரு மனிதர் தன் குடும்பத்தினருக்கு பொருப்புதாரியாவார் மறுமையில் அவரின் குடும்பத்தினர் பற்றி {அவர்களின் கடமைகளைச் சரிவர நிறைவேற்றினாரா அவர்களுக்கு மார்க்கஞானத்தைப் போதித்து அல்லாஹ்வை அஞ்சி நடக்கச் செய்தாரா? என} விசாரிக்கப்படுவார்.
மற்றொரு ஹதீஸில் நாளை மறுமையில் மனிதர்களில் அதிகம் வேதனைக்குரியவர் தன் குடும்பத்தினர்க்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்த மறந்தவராவார். என வந்துள்ளது.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே உங்களின் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை என்ன என்பதை அறிந்து அவற்றை சரிவர நிறைவேற்றுவதின் மூலமே இறைவனின் பிடியிலிருந்து நீங்களும் தப்பிக்க முடியும், நரக வேதனையிலிருந்து உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்க முடியும்.
பின்குறிப்பு: ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் அடிப்படை மார்க்க விளக்கத்தைக் கற்றுக்கொடுப்பது கட்டாய கடமையாகும். படிக்கின்ற காலத்தில் குறைந்தது விடுமுறைக் காலங்களிலாவது அதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கவில்லையானால் அதைவிட துர்ப்பாக்கியம் வேறேதுமில்லை.அல்லாஹ்வின் கிருபையால் இன்று பரவலாக பல இடங்களில் கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப் படுகின்றன அவற்றில் நம் பிள்ளைகளை சேர்த்து நரகைவிட்டும் காக்க ஒரு சிறு முயற்சியாவது செய்வோமாக.
அல்லாஹ் நம் முயற்சிகளை பயனுள்ளதாக ஆக்குவானாக ஆமீன்.



மௌலவி,ஹாபிஸ்,அப்சலுல் உலமா.
அ.முஹம்மது ஆதம் ரஷாதி M..A,