Tuesday, December 2, 2014

தொழுகை &பள்ளிவாசல் சம்பந்தமான கேள்வி பதில் 1

தொழுகை &பள்ளிவாசல் சம்பந்தமான கேள்வி பதில் 1

1.       கே: தொழுகை எப்போது கடமையாக்கப்பட்டது?
ப: ஹிஜ்ரத்துக்கு பின்

2.       கே: நபி (ஸல்) எந்த நகரத்தில் வசிக்கும்போது தொழுகை கடமையாக்கப் பட்டது?
ப:  மக்கா

3.       கே: தொழுகை ஆரம்பத்தில் ஒவ்வொரு நேரமும் எத்தனை ரகஅதுகளாக கடமையாக்கப்பட்டது?
ப: இரண்டிரண்டு ரகஅதுகளாக

4.       கே: நபி (ஸல்) அவர்களிடம் ஐந்து நேர தொழுகையாக குறைத்து வரும்படி ஆலோசனை கூறியது யார்?

ப: மூஸா  (அலை)

5.       கே: நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் தொழுகை கடமையாக்கப்பட்டது?

ப:  ஐம்பத்திரண்டு

6.       கே: நபி (ஸல்) தங்கள் சுயதேவைக்காக சென்றிருந்த சமயம் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட வேறொரு சஹாபி தொழவைத்தார் தாமதமாக வந்த நபி (ஸல்) அவரைப்பின்பற்றி தொழுதார்கள் அந்த சஹாபி யார்?
ப: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

7.   கே: மதீனா வாசிகளுக்கு முதல்முதலாக தொழவைத்தவர் யார்?

ப:  முஸ்அப் பின் உமைர் (ரலி) 

8.    கே: ஹிஜ்ரத்துக்கு முன் மக்காவில் இருக்கும் சமயம் முஸ்லிம்கள் எதை முன்னோக்கி தொழுதனர்?
ப:  மஸ்ஜித் அக்ஸா & கஃபத்துல்லா இரண்டையும் முன்னோக்கும் விதமாக

9.     கே: எந்த மூன்றை (சந்திப்பது)  ஜியாரத் செய்வதற்காக பயணம் செய்வது கூடும் என ஹதீஸில் வந்துள்ளது?
ப: அ) கஃபா, மஸ்ஜிது நபவி, மஸ்ஜித் அக்ஸா 

10.    கே: மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் ஆரம்பத்தில்  முஸ்லிம்கள் எதை முன்னோக்கி தொழுதனர்?
ப:  மஸ்ஜித் அக்ஸா

11.    கே: கஃபத்துல்லா எப்போது முஸ்லிம்களின் கிப்லாவாக மாற்றப்பட்டது?
ப:  ஹிஜ்ரத்திற்கு 16,17 மாதங்களுக்கு பின்னால்

12.    கே: எந்த நேரத் தொழுகையின் போது கிப்லா மாற்றப்பட்டது?
ப:  லுஹர் தொழுகை 


13.    கே: எந்த பள்ளிவாசலில் தொழும்போது கிப்லா மாற்றப்பட்டது?
ப:  மஸ்ஜித் கிப்லதைன்

14.    கே: நபி (ஸல்) மிஃராஜ் செல்லும்போது அனைத்து நபிமார்களுக்கும் இமாமாக தொழவைத்த பள்ளிவாசல் எது?
ப;  மஸ்ஜித் அக்ஸா

15.    கே: எந்த பள்ளிவாசல் பற்றி (தக்வா) அல்லாஹ்வின் அச்சத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது என குர்ஆன் கூறுகிறது?
ப:  மஸ்ஜித் குபா

16.    கே: அல்லாஹுதஆலா நபி (ஸல்) அவர்களை எந்த பள்ளிவாசலில் நீங்கள் எப்போதுமே நின்று தொழவேண்டாம் என குர்ஆனில் கூறியுள்ளான்?
ப:  மஸ்ஜித் ளிரார்

17.    கே: எந்த பள்ளிவாசலில் தொழுதால் உம்ராவுடைய நன்மை கிடைக்கும் என ஹதீஸில் வந்துள்ளது?
ப:  மஸ்ஜித் குபா

18.    கே: எந்த பள்ளிவாசலின் சுற்று வட்டாரங்கள் (பரகத்) அருள் நிறைந்தது என  குர்ஆனில் கூறப்பட்டுள்ளது?
ப:  மஸ்ஜித் அக்ஸா

19.    கே: மஸ்ஜிதுல் ஹரம் (கஃபத்துல்லா) கட்டப்பட்டதிற்கும் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டதிற்கும் எவ்வளவு ஆண்டுகள் இடைவெளி உள்ளதாக ஹதீஸில் வந்துள்ளது?
ப:  40 ஆண்டுகள்

20.    கே: மஸ்ஜித் அக்ஸாவை முதல்முதலில் கட்டியது யார்?
ப:  நபி ஆதம்(அலை) 

Wednesday, November 26, 2014

ரஷாதீ வலை தளம்: இஸ்லாமிய பொது அறிவு கேள்வி பதில்

ரஷாதீ வலை தளம்: இஸ்லாமிய பொது அறிவு கேள்வி பதில்: சஹாபாக்கள் பற்றிய அறிய தகவல்கள் 1 1.      கே: சஹாபாக்களில் . யாருடைய மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது ?     ப:   ஸஃ...

இஸ்லாமிய பொது அறிவு கேள்வி பதில்

சஹாபாக்கள் பற்றிய அறிய தகவல்கள் 1


1.     கே: சஹாபாக்களில் . யாருடைய மரணத்திற்காக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது ?

    ப:  ஸஃது இப்னு மஆத் (ரலி)

2.     கே: நாயகத்தின் ஹவாரிய்யூன்கள்(மார்க்க உதவியாளர்கள்) என்னும் தோழர்களில் ஒருவர் எனக் கூறப்பட்டவர் யார்?

    ப:  அஸ்ஸுபைர் இப்னுல் அவாம் (ரலி)

3.     கே: பெருமானார் (ஸல்) காலத்தில் இருபது வயதிற்கும் குறைவான இளைஞர் ஒருவர் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார் அவர் யார்?                                        
      
    ப:  உஸாமா பின் ஜைது (ரலி)

4.       கே:  உஹது யுத்தத்தில் இரு கைகளும் சல்லடையாக துளைக்கப்படும் அளவு காயம் அடைந்த சஹாபி யார்?                                                            

         ப:  தல்ஹா பின் உபைதுல்லா (ரலி)

5.     கே: இஸ்லாத்தில் (போர்க்களத்தில்) முதல்முதலில் அம்பு எய்து சண்டையிட்ட சஹாபி யார்?

          ப:  ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி)

6.       கே: சஹாபாக்களில் யாரைப்பற்றி (ஸாலிஹான) நல்ல மனிதர் என நபி (ஸல்) புகழ்ந்து கூறியுள்ளார்கள்?

           ப:  அப்துல்லா பின் உமர் (ரலி)

7.     கே: சஹாபாக்களில் ஹலால் (ஆகுமானவை) ஹராம் (ஆகாதவை) பற்றி அதிகம் அறிந்திருந்தவர் யார்?

    ப:   முஆத் பின் ஜபல் (ரலி)

8.       கே:  சஹாபாக்களில் அழகிய முறையில் குர்ஆன் ஓதக்கூடியவர் யார்?

    ப:  உபை இப்னு கஃபு (ரலி)

9.     கே:  இந்த சமுதாயத்தின் நம்பிக்கையாளர் (அமீனுல் உம்மத்) என புகழப்பட்ட சஹாபி யார்?

    ப:  அபூ உபைதா (ஆமிர் பின் ஜர்ராஹ் (ரலி)

10.    கே:  கிஸ்ராவின் முத்து பதித்த காப்புகள் கிடைக்கும் என எந்த  சஹாபிக்கு நபி (ஸல்) சுபச்செய்தி கூறினார்கள்?

    ப:   ஸுராக்கா  பின் மாலிக் (ரலி)

11.  கே:  சுவனத்தில் எந்த சஹாபியின் கிராஅத் (குர்ஆன்) ஓதுதலை நபி (ஸல்) கேட்டார்கள்?

        ப:  ஹாரிஸா பின் நுஃமான் (ரலி)

12.  கே:  ஹிஜ்ரத்துக்கு பின்னால் பிறந்த முதல் குழந்தையான சஹாபி யார்?

   ப:  அப்துல்லா பின் ஜுபைர் (ரலி)

13.  கே: கஃபாவின் உள்ளே (கட்டிடத்தின் உள்பகுதியில்) பிறந்த குழந்தையான சஹாபி யார்?

   ப:  ஹகீம் பின் ஹிஜாம் (ரலி)

14.  கே: இஸ்லாத்தில் மூன்று முறை நடைபெற்ற அனைத்து ஹிஜ்ரத்திலும் பங்கு பெற்ற சஹாபி யார்?

   ப:  அபூமூஸா அஷ்அரி (ரலி)

15.  கே: இஸ்லாத்தில் முதல்முதலாக பிறந்த குழந்தையான சஹாபி யார்?

   ப:  அப்துல்லா பின் உமர் (ரலி)

16.  கே: இஸ்லாத்தில் போர்களத்தில் முதல்முதலில் ஷஹீதான (வீரமரணம் அடைந்த) சஹாபி யார்?

   ப:  உபைதுல்லா பின் ஹாரிஸ் (ரலி)

17.  கே: இந்த சமுதாயத்தில் (ஹிப்ருல் உம்மத்) நுண்ணறிவு மிக்கவர் என புகழப்பட்ட சஹாபி யார்?

   ப:  அ) அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி)

18.  கே: இஸ்லாத்தில் முதல்முதலில் குர்ஆனை சப்தமிட்டு பகிரங்கமாக ஓதிய சஹாபி யார்?

   ப:  அப்துல்லா பின் மஸ்வூத் (ரலி)

19.  கே: இஸ்லாத்தில் முதல்முதலில் ஜன்னத்துல் பகீஃஉ கபரஸ்தானில் அடக்கம் செய்யப்பட்ட சஹாபி யார்?

   ப:  அஸ்அத் பின் ஜராரா (ரலி)


20.  கே: நபி (ஸல்) அவர்கள் யூதர்களின் சுர்யானி மொழியை கற்றுக்கொள்ளும்படி எந்த சஹாபி இடம் கூறினார்கள்?

   ப:  ஜைது பின் ஸாபித் (ரலி)