Monday, April 4, 2011

உங்கள் ஓட்டு யாருக்கு?

தேர்தல் சிந்தனை
ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இல்லையெனில் மக்களின் வாழ்வு பாதிக்கப்படும். நாட்டில் வறுமையும் பஞ்சமும் தாண்டவமாடும் என்பதற்கு முந்தையவரலாற்று நிகழ்வுகள் நமக்கு சான்றாக உள்ளன.[உம்]கீழுள்ள நிகழ்ச்சியாகும்.
274- حدثنا عبد الله قال : حدثنا أحمد بن إبراهيم بن كثير العبدي ، قال : حدثني خلف بن تميم ، قال : حدثنا إسماعيل بن إبراهيم بن مهاجر ، قال : سمعت أبي يذكره عن مجاهد ، قال : « كان ملك أعطي طول عمر ، وكان شديد الحجاب ، فقال : ما يعرفني إلا ناس قليل من أهل مملكتي ، فلو سيرت في الأرض لأنظر ما يقول الناس ويشكون ؟ فقال لحاجبه : لا تدخلن علي أحدا ، وأخبرهم أني على وجع . قال : فذهب ، فنزل على رجل له بقرة تحلب حلاب ثلاثين بقرة ، فأعجبته ، فقال : لو أني أخذت هذه البقرة ؛ فإن لبنها يكفي من لبن ثلاثين بقرة ، فأصبحت البقرة قد ذهب ثلث حلابها ، فقال ذلك الملك لصاحبها : أخبرني عن بقرتك ، أرعيتها في غير مرعاها ؟ أو شربت في غير مشربها ؟ فقال الرجل : لا ، ولكن أرى الملك حدث نفسه بظلم ، فذهبت بركتها ، قال : والملك من أين يعرفك ؟ قال : هو الحق الذي أقول لك ، إن الملك إذا حدث نفسه بظلم ذهبت البركة ، قال : فعاهد الملك ربه ألا يأخذها أبدا . فرجع لبنها بعدل الملك ، وقال : ألا أرى إذا هم الملك بظلم ذهبت البركة ؟ »
நல்லாட்சி மலர்ந்தால்தான் நாம் பூமியில் வாழ்வதில் அர்த்தமுண்டு இல்லையெனில் நம் வாழ்வு அர்த்தமற்றதாகும் என்பதற்கு அண்ணலாரின் அறிவுரை சான்றாகும்.
2192 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْأَشْقَرُ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ وَهَاشِمُ بْنُ الْقَاسِمِ قَالَا حَدَّثَنَا صَالِحٌ الْمُرِّيُّ عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا
سنن الترمذي:6/52
"உங்கள் ஆட்சியாளர்கள் நல்லவர்களாகவும்,உங்களில் செல்வந்தர்கள் கொடைவள்ளல்களாகவும்,உங்களின் காரியங்கள் உங்களுக்கிடையில் [ஆண்கள்]ஆலோசிகப்பட்டும் நடைபெறுமானால் அப்பொழுது நீங்கள் பூமியின் மீது வாழ்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.இதற்கு மாற்றமாக உங்களின் ஆட்சியாளர்கள் மோசமானவர்களாக,உங்களில் செல்வந்தர்கள் கஞ்சர்களாக,உங்களின் காரியங்கள் உங்களின் பெண்களிடத்தில் ஒப்படைக்கப் பட்டதாக இருக்குமானால் அப்பொழுது பூமியில் வாழ்வதைவிட சாவதே மேல்.என நபிகள் [ஸல்] அவர்கள் நவின்றுள்ளார்கள்"
ஆட்சி மோசமாக அமைவதற்கு மக்களின் செயல்கள் தான் காரணம் என்பதையும் மார்க்கம் அறிவுறுத்தியுள்ளது;
1594 - حدثنا عبد الله ، حدثنا علي بن مسلم ، حدثنا سيار ، حدثنا جعفر ، حدثنا عنبسة الخواص ، عن قتادة قال : قال موسى بن عمران عليه السلام : يا رب ، أنت في السماء ونحن في الأرض فما علامة غضبك من رضاك ؟ قال : « إذا استعملت عليكم خياركم فهو علامة رضائي وإذا استعملت عليكم شراركم فهو علامة سخطي »
ஒரு முறை மூஸா [அலை]அவர்கள் அல்லாஹ்விடம் யா! அல்லாஹ் நீயோ வானத்தில்[எங்களின் கண்ணுக்கு தெரியாமல்]இருக்கிறாய் நாங்கள் பூமியில் இருக்கிறோம் நீ எங்களின் செயல்களை பொருந்திக்கொண்டு எங்களின் மீது மகிழ்ச்சியாக இருக்கின்றாயா?அல்லது எங்களின் செயல்கள் பிடிக்காமல் எங்களின் மீது கோபமாக இருக்கின்றாயா? என்பதை நாங்கள் எப்படி தெரிந்துகொள்வது எனக்கேட்க அதற்கு பதில் அல்லாஹுதஆலா பின்வருமாறு கூறினான்;நான் உங்கள் ஆட்சியாளர்களை நல்லவர்களாக நியமித்திருந்தால் அது என் மகிழ்ச்சிக்கு அடையாளம். உங்கள் ஆட்சியாளர்களை மோசமானவர்களாக நியமித்திருந்தால் அது உங்களின் செயல்களால் நான் கோபமுற்று இருப்பதற்கு அடையாளமாகும்.
இதைத்தான் பனூஇஸ்ரவேலர்களை அடக்கியாண்டு கொண்டிருந்த சர்வாதிகாரி புக்துநஸ்ரு என்பவனும் பதிலாக கூறினான்.அதாவது;அவனிடம் மக்கள் எங்களை ஏன் கொடுமைப் படுத்துகிறாய் எனக்கேட்க அதற்கவன் இது நானாக செய்யவில்லை நீங்கள் செய்யும் அநியாயம் அட்டூழியத்தால் இறைவன் உங்களின் மீது இவ்வாறு கொடுமைப் படுத்தும்படி என்னை ஏவி உள்ளான் எனக்கூறினான்.
இன்னொரு பக்கம் நாம் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஆட்சியாளர்களின் இந்த நிலைகண்டு மனம் தளர்ந்து விடாமல் இந்த அளவிலாவது இருக்கின்றதே இதைவிட மோசமான சூழ்நிலை ஏற்படாமல் அல்லாஹ் நம்மைப் பாதுகாத்துள்ளதற்காக நன்றி செலுத்தி பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதையும் எம்பெருமான் [ஸல்]அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
2132 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ قَالَ
دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنْ الْحَجَّاجِ فَقَالَ مَا مِنْ عَامٍ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُ هَذَا مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

பின்குறிப்பு;நல்லாட்சி அமைந்திட நாம் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஓட்டு போட்டால் முடிந்து விடும் என்பது வெறும் பகல் கனவாகும் மாறாக நாமும் முதலில் நல்லவர்களாக வாழ்ந்தால்தான் நம்மை ஆள்பவர்களும் நல்லவர்களாக அமைவார்கள் அதில்லாதவரை ஆட்சியாளர்களை குறைகூறிக் கொண்டிருப்பது வீன்செயல் என்பதை உணர்வோமாக.