Sunday, February 20, 2011

சுன்னத்தைப் பேணி ஜன்னத்தைப் பெறுவோம்.


சுன்னத்தை பின்பற்றுவதில் சஹாபாக்களின் நடைமுறை;

640 - قال ابن جريج : قال عطاء : « فلا يخطئني إذا أفضت أن أشرب من ماء زمزم » قال : « وقد كنت فيما مضى أنزع مع الناس الدلو (1) التي أشرب منها اتباع السنة ، فأما مذ كبرت فلا أنزع ، ينزع لي فأشرب ، وإن لم يكن لي ظمأ ، اتباع صنيع محمد ، صلى الله عليه وسلم ، قال : فأما النبيذ (2) فمرة أشرب منه ، ومرة لا أشرب منه »
பொருள்;[௧]வாளி,[௨]பேரீச்சம்பழம் ஊறவைத்த தண்ணீர்.
விளக்கம்;ஹழ்ரத் அதாஉ [ரலி] ஜம்ஜம் தண்ணீர் அருந்துவதில் நபியவர்களின் வழிமுறையை பின்பற்றுவதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தனர் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

344 - حدثنا أبو العباس محمد بن يعقوب ، أنبأ الربيع بن سليمان ، أنبأ الشافعي ، أنبأ سفيان ، عن هشام بن حجير ، قال : كان طاوس يصلي ركعتين بعد العصر ، فقال له ابن عباس : « اتركها » فقال : إنما نهي عنهما أن تتخذ سلما أن يوصل ذلك إلى غروب الشمس ، قال ابن عباس : « فإن النبي صلى الله عليه وسلم قد نهى عن صلاة بعد العصر ، وما أدري أيعذب عليه أم يؤجر لأن الله تعالى يقول : ( وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة (1) ) » « هذا حديث صحيح على شرط الشيخين ، موافق لما قدمنا ذكره من الحث على اتباع السنة ، ولم يخرجاه بهذه السياقة »
நபியவர்களின் வழிமுறைகளை பின்பற்றுவதிலும் அதில் மாற்றுக்கருத்திற்கு இடம்பாடிருப்பின் அதில் பேனுதலை சஹாபாக்கள் கடைபிடித்தனர் என்பதற்கும் இது சான்றாகும்.

(1)            பிற்காலத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும் என்பது பற்றியும் அப்போது மக்களின் மனநிலை தலைமைக்கு கட்டுப்படுவதில் பின்தங்கியிருக்கும். அதனால் மக்களுக்கு தங்களின் சமூகத் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் தான் வெற்றி உண்டு என்பதை சுட்டிக் காட்டுவதுடன் தன் வழிமுறைகளையும் தனக்குப்பின் தனது சஹாபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றும்படி நபி [ஸல்]அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

- أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ حَدَّثَنِى خَالِدُ بْنُ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ : صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- صَلاَةَ الْفَجْرِ ثُمَّ وَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً ، ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ ، فَقَالَ قَائِلٌ : يَا رَسُولَ اللَّهِ كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ فَأَوْصِنَا. فَقَالَ :« أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ كَانَ عَبْداً حَبَشِيًّا ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِى فَسَيَرَى اخْتِلاَفاً كَثِيراً ، فَعَلَيْكُمْ بِسُنَّتِى وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ ، وَإِيَّاكُمْ وَالْمُحْدَثَاتِ ، فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ ». وَقَالَ أَبُو عَاصِمٍ مَرَّةً :« وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ ، فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ ». تحفة 9890 إتحاف 13818





97 - أَخْبَرَنَا أَبُو الْمُغِيرَةَ حَدَّثَنَا الأَوْزَاعِىُّ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ عَنِ الزُّهْرِىِّ قَالَ كَانَ مَنْ مَضَى مِنْ عُلَمَائِنَا يَقُولُونَ : الاِعْتِصَامُ بِالسُّنَّةِ نَجَاةٌ ، وَالْعِلْم ُ يُقْبَضُ قَبْضاً سَرِيعاً ، فَنَعْشُ الْعِلْمِ ثَبَاتُ الدِّينِ وَالدُّنْيَا ، وَفِى ذَهَابِ الْعِلْمِ ذَهَابُ ذَلِكَ كُلِّهِ.
மார்க்கக் கல்வி நிலைத்திருப்பது உலகமும் அதன் சீர்திருத்தமும் நிலைக்க காரணமாகும் அது குறைந்தால் சீர்குலைவுக்கு காரணமாகும் என்பதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

98
- أَخْبَرَنَا أَبُو الْمُغِيرَةِ حَدَّثَنَا الأَوْزَاعِىُّ عَنْ يَحْيَى بْنِ أَبِى عَمْرٍو السَّيْبَانِىِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الدَّيْلَمِىِّ قَالَ : بَلَغَنِى أَنَّ أَوَّلَ الدِّينِ تَرْكاً السُّنَّةُ ، يَذْهَبُ الدِّينُ سُنَّةً سُنَّةً كَمَا يَذْهَبُ الْحَبْلُ قُوَّةً قُوَّةً.
கயிற்றுப் பிரிகள் தனித்தனியாக பிரிந்தால் எவ்வாறு பலமில்லாமல் போகுமோ அது போன்று சுன்னத்துக்கள் குறையக் குறைய தீன் இல்லாமல் ஆகிவிடும் என்பதை சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் நம் சமுதாய மக்களின் நிலை குறிப்பாக சிறுவர்கள்,வாலிபர்களின் நிலை மிக மிக மோசமாகிக் கொண்டிருப்பது வருந்தத்தக்க விசயமாகும் சினிமா,சீரியல் மோகங்களில் சிக்கி மற்றார்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதில் செலுத்தும் அக்கறை சுன்னத்தான வழிமுறைகளைப் பின்பற்றுவதில் கொஞ்சமும் இல்லை என்பது நம் சமுதாயத்தின் இழி நிலைக்கு மிகப்பெரும் காரணம் என்பதை நாம் உணராமலே வாழ்ந்து கொண்டிருப்பது அதையும் விட மிகப்பெரும் அறியாமையாகும் அல்லாஹ்தான் நம் சமுதாயத்தைக் காக்கப் போதுமானவன்.

சுன்னத்தைப் பின்பற்றச் செய்வதில் சஹாபாக்களின் கண்டிப்பு;


ஒரு முறை ஹழ்ரத் உமர்[ரலி] அவர்களிடம் ஹழ்ரத் அப்துர்ரஹ்மான் பின்அவ்ஃப்[ரலி]அவர்கள் தங்கள் மகன் முஹம்மது[ரலி] அவர்களை அழைத்துக்கொண்டு வந்தனர் அப்பொழுது அச்சிறுவர் பட்டாடை அணிந்திருந்தார் அதைப் பார்த்த உமர்[ரலி] அவர்கள் என்ன உங்கள் மகன் பட்டாடை அணிந்துள்ளார்? என வினவ அதற்கு அப்துர்ரஹ்மான்[ரலி] அவர்கள் நானே பட்டாடை உடுத்தியுள்ளேன் என் மகன் சிறுபிள்ளை உடுத்தினால் என்ன? என்று பதில் கூறினார்கள் அதற்கு உமர்[ரலி] அவர்கள் உங்களுக்கு உடம்பில் அதிகமாக பேன் பத்திக்கொள்வதால் நபி[ஸல்] அவர்களிடம் நீங்கள் அதை முறையிட்டீர்கள் அதன் காரணமாக வைத்தியத்தின் அடிப்படையில் உங்களுக்கு நபி[ஸல்] அனுமதி அளித்துள்ளனர் அது போன்ற தொல்லை உன் மகனுக்கு இல்லையே பிறகு எப்படி நீர் அவருக்கு பட்டாடை அணிவிக்கலாம் எனக் கூறி அவர் உடம்பில் இருந்த பட்டாடையை உமர்[ரலி] அவர்கள் கிழித்தெறிந்தனர். சிறுபிள்ளைகள் பட்டு தங்கம் போன்றதை அணிந்தால் என்ன என்று கூறுபவர்கள் இந்த நிகழ்வினைப் பார்த்தாவது படிப்பினை பெறவேண்டும்.
[நூல்;ஹயாதுஸ் சாஹாபா]